#IPL2022: திரில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி..!
பெங்களூர் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக ரஹானே, வெங்கடேஷ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து கொல்கத்தா அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியில் களமிறங்கிய ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கும்.
இறுதியாக கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3, ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டை பறித்தனர். 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக பாஃப் டு பிளெசிஸ்,
அனுஜ் ராவத் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே அனுஜ் ராவத் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
கடந்த போட்டியில் அடித்தது போல விராட் , பாஃப் டு பிளெசிஸ் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் 12, பாஃப் டு பிளெசிஸ் 5 என ஒற்றை இலக்கு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய டேவிட் வில்லி 3 பௌண்டரி விளாசி 18 ரன்னில் நிதிஷ் ராணாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட ஷாபேஸ் அகமது 3 சிக்ஸர் உட்பட 27 ரன்கள் குவித்து ஸ்டாம் அவுட் ஆனார். மத்தியில் இறங்கிய ரதர்ஃபோர்ட் 28 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியாக பெங்களூர் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் டிம் சவுதி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டை பறித்தனர். இதுவரை பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடிய தலா 1 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.