7 மணி நேரம் அவகாசம் அளித்திருந்தேன்.. அவர்களால் வரமுடியாது – அண்ணாமலை
தமிழிசை செளந்தரராஜனை தரக்குறைவாக பேசுவதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு 7 மணி நேரம் அவகாசம் அளித்திருந்தேன், ஏனெனில் அவர்களால் வரமுடியாது. கட்டுகதையை கிளப்பினால் மட்டும் போதாது ஆதாரம் வேண்டும். என் வாழ்க்கையை புரட்டிபோட்டு பார்த்தாலும் ஒரு கடுகு கூட கிடைக்காது, ஒன்றுமே கிடைக்காது என தெரிவித்தார். திமுக பொறுத்தவரை பொய் சொல்வதில் வள்ளுவர்கள். அரசியலில் கருத்தியல் ரீதியாக எங்களோடு மோத முடியாமல், குறிப்பாக சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், பொய்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
திமுக அமைப்பு பொதுச்செயலாளர் புதிது புதிதாக கட்டுக்கதையை கூறி வருகிறார். எதனை கதைகளை சொன்னாலும் சரி, திமுகவை கேள்வி கேட்பதை விட முடியாது. திமுக செய்யும் தவறுகளை தொடர்ந்து மக்கள் மன்றத்தில் வைத்துக் கொண்டே இருப்போம் என தெரிவித்தார். நான் முதல்வராக வேண்டும்மென்று அரசியலுக்கு வரவில்லை, முதல்வரை “உருவாக்குவதற்க்காக” அரசியலுக்கு வந்துள்ளேன். அடுத்த தமிழக முதல்வராக வரவேண்டும் என்றால், ஆர்எஸ் பாரதி என்ன கூறினாரோ, அதை ஏற்றுக்கொண்டு பாஜக பக்கம் வந்துவிடுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் .
பாஜக பக்கம் வந்தால் மட்டுமே அடுத்த தலைவர் பதவி, அதாவது என்னுடைய பதவி காலியாகும், அது மற்றொருவருக்கு கிடைக்கும். அது நீங்களாக இருப்பீர்கள் என கூறினார். பாஜகவின் அற்புதமே சாதாரண மனிதரை தலைவராக்குவதுதான் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் சமீப காலமாக fake நியூஸ் கார்டுகள் அதிகரித்து வருகின்றன. முன்னணி தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் செய்தி கார்டுகளே fake கார்டாக வருகிறது, அது உண்மையா என என்னையே பலர் கேட்டுள்ளனர் என கூறினார். மேதகு ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனை தரக்குறைவாக பேசுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.