சமந்தாவை ரிசர்வ் செய்த சிவகார்த்திகேயன்.! காரணம் என்ன தெரியுமா.?
சிவகார்திகேயன் நடிப்பில் டான்,அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக SK20 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை முடித்துவிட்டு இந்த ஆண்டே படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் இப்பொது தொடங்கப்போவதில்லை. சிவகார்த்திகேயன் இன்னும் 2 படங்கள் நடித்த பிறகே தான் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து மடோன் அஷ்வின் இயக்கும் அந்த படத்தில் சமந்தா தனக்கு ஜோடியாக நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் நினைத்துள்ளாராம்.. இதனால் சமந்தாவிற்கு கால் செய்து இப்படி ஒரு படம் இருக்கு நீங்கள் நடிக்கிறீங்களா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுவிட்டாராம்.
படம் தொடங்க இன்னும் பல மாதங்கள் இருப்பதால் அதற்கு முன்பே சமந்தாவை ரிசர்வ் செய்த காரணம் என்னவென்றால், சமந்தா தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு சிவகார்த்திகேயன் முன்னதாகவே சமந்தாவிடம் கதையை கூறி சம்மதம் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா சீமராஜா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.