சுரங்க நடைபாதையை திறந்து வைத்த முதலமைச்சர்..!
சென்னை சென்ட்ரலில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சதுக்கத்தின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவீன கட்டமைப்புகளுடன் சுரங்க நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.