இரண்டு முறை துபாய் பயணம் ரத்து – மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமைச்சர்!

Default Image

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல இருந்தார். இதற்காக அவர் மீனப்பாக்கம் விமான நிலையம் வந்த நிலையில், விசாவில் பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதன்பின், விசா பிரச்சனை முடிந்து நேற்று மாலை ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட விமான நிலையம் வந்த அமைச்சர், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக வீடு திரும்பினார்.

துபாய் புறப்படுவதற்கு விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சிவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சா் துரைமுருகன் ஏா் இந்தியா அதிகாரிகளை அழைத்து நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை எனக் கூறி தனது பயணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார். பின்னர் அதிகாரிகளும் அமைச்சரின் துபாய் பயணத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்தனர்.

அமைச்சர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், லேசான நெஞ்சிவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, நீர்வளத்துறை அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ஒரே நாளில் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்