#IPL2022: பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத்.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5-ம் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே ஹைதராபாத் அணி தனது விக்கெட்களை இழக்க தொடங்கியது. அந்தவகையில் கேன் வில்லியம்சன் 2 ரன்களும், அபிஷேக் சர்மா 9 ரன்களும், நிகோலஸ் பூரன் மற்றும் ராகுல் திரிபாதி ஒரு ரன் கூட அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்க்கம் அதிரடியாக ஆட, அவரையடுத்து களமிறங்கிய அப்துல் சமத் 4 ரன்களிலும், சிறப்பாக ஆடிய ரோமரியோ 24 ரன்களும், அதிரடியாக ஆடிவந்த வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் சஹல் தலா 3 விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்