இன்றைய நாளின்(30.03.2022) ராசி பலன்கள் …, பணம் செழிக்கும் நாள் இன்று..!

Default Image

மேஷம்

mesham

உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். சிறந்த நாளான இன்று, நட்பு வட்டாரம் விரிவடைவதுடன் உங்கள் பணியில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிகம் பணம் காணப்படுவதுடன், அதை பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவீர்கள். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். எனவே முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். முறையாக திட்டமிட்டு பணி செய்ய வேண்டும். ஏனென்றால், ஓய்வு நேரம் மிகக் குறைவாக இருக்கும். குழப்பமான மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உணர்வும் காணப்படாது. மேலும் உங்கள் செலவுகள் அதிகம் இருக்கும். இன்று சிறிது அசௌகரியமாக உணர்வீர்கள். எனவே உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணிகள் சற்று அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்று கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உங்களுக்கு கண்ணெரிச்சல் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். மேலும் உங்கள் துணையுடன் நட்பான உறவு கிடைப்பதுடன், நிதி நிலைமை சிறந்த பலனளிக்கும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊக்கத்தொகையும் பெறுவீர்கள். இன்று ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். மேலும் பணியிட சூழலில் பதட்டமும் காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கால் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் தியானம் அல்லது யோகம் மேற்கொள்வது சிறந்தது.

விருச்சிகம்

இன்று சில சௌகரியமான விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் பணி தளத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் துணையுடன் உறவை தக்க வைத்துக் கொள்ள அணுகுமுறை தேவை. பண வரவு குறைவாகவே இருக்கும். இன்று தலைவலி ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

தனுசு

இன்று உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். உங்கள் வேலையைப் பொறுத்து உயர்வு கிடைக்கும். உங்கள் துணையின் விருப்பப்படி நடந்து கொள்வீர்கள். சிறிது பணம் சேமிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று உங்கள் செயல்களில் வேகம் வேண்டும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உங்கள் குழப்பமான உணர்வு காரணமாக உங்கள் துணையிடம் அதை வெளிப்படுத்துவீர்கள். தேவையற்ற செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்காது.

கும்பம்

இன்று உங்கள் வளர்ச்சிகளில் சில தடைகள் காணப்படும். பணியிடத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மேலும் உங்கள் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கும், மன உளைச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. மேலும் உங்கள் மேல் அதிகாரிகளுடன் பேசும்போது அனுசரித்து செல்ல வேண்டும், மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். உங்கள் செலவுகள் கூடுதலாக இருக்கும், கால் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin