முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் – பள்ளி நிர்வாகம் பதில்

Default Image

தன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய நோடீஸுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 

சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் பலியானார். மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு நேற்று நோட்டீஸ்  அனுப்பி இருந்தார். அதன்படி, 24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக பள்ளி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்  என்றும், 64 வயது முதியவரை பள்ளி பேருந்து ஓட்டுநராக நியமித்தது ஏன்? வாகனத்திலிருந்து அனைத்து மாணவர்களும் இறங்கி விட்டனரா என பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்? விபத்து குறித்து தகவல் அறிந்தும் தாளாளர் பிற்பகல் வரை பள்ளிக்கு வராதது குறித்து விளக்கமளிக்குமாறு  உத்தரவிட்டு  இருந்தார். முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய நோடீஸுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்