முதல்வரின் பயணத்தை விமர்சித்த பாஜக பிரமுகர் கைது!
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த சேலம் மேற்கு மாவட்டம் பாஜக இளைஞரணி செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாய் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த உடை ரூ.17 கோடி என அமைச்சர் பி.டி.ஆர். தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.