#Breaking:மாணவர் பலி – இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Default Image

சென்னை:2-ஆம் வகுப்பு  மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ஆம் வகுப்பு மாணவர் திக்சித்(வயது 7) என்பவர் சிக்கி பலியானார்.மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவு:

விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் மோதி 2 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து,நேற்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டார்.

சிசிடிவி காட்சிகள்:

அதன்பின்னர்,மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்,முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

தனது ஒரே மகன்:

இதனைத் தொடர்ந்து,சிறுவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டதையடுத்து,பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தனது ஒரே மகனை பறிகொடுத்த இருப்பதாகவும்,பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று சிறுவனின் தாய் தெரிவித்திருந்தார்.பின்னர், அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின், தற்போது சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அறிக்கையில் வெளியான தகவல்:

மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில்,பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

15 நாள் நீதிமன்ற காவல்:

இந்நிலையில்,மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,பள்ளி பெண் ஊழியர் ஞானசக்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஆனால்,சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள வேன் ஓட்டுநர் பூங்காவனம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்