#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-ம் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்:
குஜராத் டைடன்ஸ்:
ஷுப்மன் கில், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி.
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.