என் மனைவியை பற்றி இனிமேல் பேசவே கூடாது.?! ஆஸ்கர் மேடையில் ‘பளார்’. !

Default Image

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் சிறந்த விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார், அப்போது அவர் மேடையில் அமர்ந்திருந்த பிரபலங்களை மையப்படுத்தி நகைச்சுவையாக பேசத் தொடங்கினார். அப்போது வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து கிறிஸ்-ன் பேசிய ஜோக் ஸ்மித்தை கோபப்படச் செய்துள்ளது.

பிரபல ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தையும், வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். இரண்டையும் ஒப்பிட்டு கிறிஸ் ராக் பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்து வில் ஸ்மித் வேகமாக சென்று கிறிஸை கன்னத்தில் அறைந்தார். “என்னுடைய மனைவியின் பெயரை உன் வாயில் இருந்து சொல்லாதே” என கூறிவிட்டுட சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain