சித்தூர் பேருந்து விபத்து -பிரதமர் நிவாரணம் அறிவிப்பு..!
ஆந்திரா சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பகரபேட்டா காட் சாலையில் 52 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு 10:30 மணியளவில் பேருந்தில் பயணித்த பயணிகள் நகரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரா சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Pained by the loss of lives in a tragic bus accident in Chittoor, AP. Condolences to the bereaved families. I hope the injured recover soon.
The next of kin of the deceased would be given Rs. 2 lakh from PMNRF and Rs. 50,000 would be given to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 27, 2022