சித்தூரில் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு, 45 பேர் காயம்!

Default Image

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பகரபேட்டா காட் சாலையில் 52 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு 10:30 மணியளவில் பேருந்தில் பயணித்த பயணிகள் நகரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பதி நகர்ப்புற காவல் துறையினரின் கூறுகையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த 52 பேர் கொண்ட குழு, நகரிக்கு அருகிலுள்ள கிராமத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் சென்றுள்ளனர். பேருந்து பாக்கராபேட்டா காட் சாலையை கடந்து திருப்பதி நோக்கி சென்றபோது அதிவேகமாக சென்றதால் பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பயணிகளை பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூரில் உள்ள எஸ்விஆர் ரூயா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி நகர்ப்புற எஸ்பி சி வெங்கட அப்பல நாயுடு ரூயா மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். டிரைவரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது என தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு சித்தூர் ஆட்சியர் எம்.ஹரிநாராயணன் உத்தரவிட்டார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth