“ஆரஞ்சு கேப்-ஐ தோனி பேர்ல எழுதுங்கோ”- ட்விட்டரில் ட்ரண்டாகும் #Orangecap
முதல் போட்டியிலே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 50 ரன்கள் விளாசி அசத்திய நிலையில், அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படவுள்ளது.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது.
132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து 50 ரன்கள் குவித்தார். இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் தோனி அரைசதம் விளாசினார்.
இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெயரை தல தோனி பெற்றுள்ள நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு கேப்-ஐ அவர் வாங்குவது உறுதியானது. தற்பொழுது அவருக்கு சமமாக கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே ஆடி வந்த நிலையில், ரஹானே சான்டனர் வீசிய பந்தில் அவர் வெளியேறினார். இதன்காரணமாக ஆரஞ்சு கேப் தோனிக்கு வழங்கப்படவுள்ளது. இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்விட்டரில் #Orangecap-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Csk fans~
Eludhunga
Orange cap ah Mahi perla la eludhunga pic.twitter.com/ouTI6aGGE3— unknown_user (@LOOSERGAMING4) March 26, 2022
It means Dhoni remains the orange cap holder ????
— No hm no k (@ProProProNoob) March 26, 2022