இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு- யோகி ஆதித்யநாத் ..!

Default Image

இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றவுடன் அவரது அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த யோகி கொரோனா காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பதவியேற்ற அடுத்த நாளே அதாவது இன்று அவர் தனது புதிய அமைச்சரவையுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவை வழங்கும் வகையில், பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 80 கோடி குடிமக்கள் பயன் பெற்று வருகின்றனர். ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2022 வரை சுமார் 15 மாதங்களுக்கு நாட்டிற்குள் இந்தத் திட்டத்தின் பலனை அனைவரும் பெற்றனர். உத்தரப்பிரதேசத்தில் 15 கோடி மக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்