இந்திய விமானப்படையில் குரூப் சி காலிப்பணியிடங்கள்..! 10, 12 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
இந்திய விமானப்படை IAF “குரூப் சி ஆட்சேர்ப்பு”2022:
இந்திய விமானப்படை(IAF) ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS), குக் (COOK), மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹிந்தி தட்டச்சர் (Hindi Typist),கார்பெண்டர்(Carpenter) போன்ற குரூப் சி பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விளம்பரம் செய்துள்ளது.
இந்திய விமானப்படை குரூப் சி காலியிட விவரங்கள்:
பதவியின் பெயர்
|
காலியிடம்
|
வேலை இடம்
|
வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS)
|
1
|
விமான அதிகாரி கமாண்டிங், விமானப்படை நிலையம், பரேலி, உத்திரபிரதேசம்
|
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS)
|
1
|
கட்டளை அதிகாரி, விமானப்படை மருத்துவமனை, விமானப்படை நிலையம், கோரக்பூர்,உத்திரபிரதேசம்
|
சமையல்காரர்
|
1
|
ஏர் ஆபிசர் கமாண்டிங், விமானப்படை நிலையம், கோரக்பூர்,உத்திரபிரதேசம்
|
கார்பெண்டர்
|
1
|
ஸ்டேஷன், கமாண்டர், விமானப்படை நிலையம், போவல்லி, உத்தரகண்ட்
|
இந்தி தட்டச்சர்
|
1
|
தலைவர், மத்திய விமானப்படை வீரர்கள் தேர்வு வாரியம்,விமானப்படை முகாம் நரைனா, டெல்லி கான்ட்
|
விண்ணப்பிக்கும் தேதி:
10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்,கார்பெண்டர்,எம்டிஎஸ் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு விமானப்படை நிலையங்கள் மாற்று விமானப்படை மருத்துவமனையில் நடைபெறும். ஹிந்தி தட்டச்சர் பதவிக்கான ஆட்சேர்ப்பு சென்ட்ரல் ஏர்மென் செலெக்ஸ்ன் போர்டு (CASB) டெல்லியில் நடைபெறும்.
கல்வி தகுதி:
- வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS) :10 வது தேர்ச்சி
- மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) :10 வது தேர்ச்சி
- சமையல்காரர் : 10 வது தேர்ச்சியுடன் சான்றிதழ் அல்லது கேட்டரிங் டிப்ளமோ மற்றும் 1 வருட அனுபவம்.
- கார்பெண்டர் : 10 வது தேர்ச்சி .அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது முன்னாள் படைவீரரிடமிருந்து கார்பெண்டர் டிரேடில் ஐடிஐ சான்றிதழ்.
- ஹிந்தி தட்டச்சர் : 12-ம் வகுப்பு படித்த இந்தி தட்டச்சர் மற்றும் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம்.
இந்திய விமானப்படை குரூப் C விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு:
பொது :18 -25 வயது
OBC :18-28 வயது
SC/ST :18-30 வயது
தேர்வு செயல்முறை:
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.