அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு குமரி கடல் பகுதி மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி , வெப்பச் சலனத்தால் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28, 29 ஆகிய தேதிகளில் மேற்கு மாவட்டங்கள் குமரி, நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025