#BREAKING: அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் – போக்குவரத்துத்துறை

‘உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை.
அசைவ உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழக அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துறை டெண்டரில் சைவ உணவகங்களில் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துறையின் செயல்பாடு ஒருவரது உணவு உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளில் சைவ உணவு என்ற வார்த்தை நீக்கம் செய்யயப்பட்டது.
தரமற்ற உணவகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பேருந்துகளை நிறுத்துவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. இந்த நிலையில் தொலைதூர அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கான ஓட்டல்களை முடிவு செய்ய பகிரங்க போட்டியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. அதன்படி, ஓட்டல்களுக்கான நிபந்தனைகளை தமிழக போக்குவரத்துறை நேற்று வெளியிட்டிருந்தது.
இருப்பினும், போக்குவரத்துறை வெளியிட்ட அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வீதியில் திருத்தும் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துறை நிபந்தனையை நீக்கியதால் அரசு பஸ் நிற்கும் ஓட்டலில் சைவ, அசைவ உணவுகளை தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.