உனக்கு தமிழ் தெரியுமா சான்ஸ் கிடையாது.! இதுதான் திரையுலக நிலவரம்.!- வெற்றிமாறன்

Default Image

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.

இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தேசியவிருதுகள் மட்டுமின்று பல விருதுகளை குவித்து வருகிறது. இவர் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

HBDVetrimaaran

இந்த நிலையில் சமீபத்தில் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற International Film Festival of Kerala 2022ல் சினிமா பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெற்றி மாறன் ” இன்றைய உலகம் பிளவுபட்டு உள்ளது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்றே கிடையாது. மய்யம் என்று சொல்பவர்களும் வலதுசாரி தான்,..

ஆனால், அதை தேர்வு செய்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உலகில் நடப்பதைதான் நாம் திரைப்படங்களில் காட்ட முடியும். ஒருவேளை இந்த ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறினால் வித்தியாசமான படங்கள் வரலாம்…ஒரு காலத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு தமிழ் தெரிந்தால் வாய்ப்பு தர மாட்டார்கள், தமிழ் பேச தெரியாத மற்ற மொழி நடிகைகளையே நடிக்க வைத்தனர். தற்போது இந்த சூழல் மாறி உள்ளது” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்