#BREAKING : மறுதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைத்த சபாநாயகர்..!

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.
2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18-ஆம் தேதி) தாக்கல் செய்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி அதாவது இன்று வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த மறுநாள் (மார்ச் 19-ஆம் தேதி) வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல் சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் பதிலளித்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை ஒத்திவைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025