கோடைக்காலமா? வியர்வை துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? இத செஞ்சாலே போதும்..!
கோடைக்காலம் தொடங்கிய உடனேயே வெயிலின் தாக்கத்தால் உடலில் வியர்வை வழிய தொடங்கி இருக்கும். அதிலும் சிலருக்கு அக்குளில் துர்நாற்றம் வீச தொடங்கும். இப்படி இருப்பதால் யாரிடமும் அருகில் நின்று பேச பழக தயங்கி விலகிவிடுவார்கள். இதற்கு கீழ்வரும் குறிப்புகளை பின்பற்றுங்கள்.
உருளைக்கிழங்கு துண்டுகள்: கைகளுக்கு அடியில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். ஒரு உருளைக்கிழங்கு துண்டை எடுத்து கைகளுக்குக் கீழே சிறிது நேரம் வைக்கவும். இது நல்ல பலனை தரும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் அக்குள் வாசனையை நீக்குவதில் சிறந்ததாக இருக்கும். உங்கள் கைகளில் சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து, கைகளின் கீழ் மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் எண்ணெயை தேய்த்த பிறகு, குளிர்ந்த நீரில் அதை அகற்றவும்.
தக்காளி சாறு: வீட்டு வைத்தியம் கோடையில் அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை பெருமளவு குறைக்கும். இதற்கு தக்காளியை துருவி அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இப்போது காட்டன் உதவியுடன் அக்குளை மசாஜ் செய்யவும்.
எலுமிச்சை: சருமப் பராமரிப்பில் சிறந்த எலுமிச்சை, அக்குள் வாசனையைத் தவிர, அதில் உள்ள கருமையையும் நீக்கும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து, இந்த பேஸ்ட்டை கைகளின் கீழ் தடவ வேண்டும். குளிர்ந்த நீரில் மட்டும் இந்த பேஸ்ட்டை அகற்றவும்.
ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சீடர் வினிகர் அக்குள் வாசனையையும் நீக்க வல்லது என்று கூறப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கவும். இப்போது இந்த தண்ணீரில் உங்கள் அக்குள்களை கழுவவும்.