இந்த கடமை தாய்த் தமிழகத்தின் அரசுக்கு இருக்கிறது – டிடிவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத்தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட்.
பொருளாதார நெருக்கடி
அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் தமிழ் மக்கள்..!
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களின் விலையும் கூட பல மடங்கு அதிகரித்துள்ளதால் மூன்று வேளை உணவு உண்பதற்கு கூட மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத சூழலில் மக்கள் பலர் அகதிகளாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நேற்று மட்டும் 16 இலங்கை தமிழர்கள் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேட்டியளிக்கையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாத சூழ்நிலையாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் தங்கள் இந்தியாவிற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
தாய் தமிழகத்தின் கடமை
இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத்தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அப்படி வருகிறவர்களை எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் ஆதரவளிக்க வேண்டிய கடமை தாய்த் தமிழகத்தின் அரசுக்கு இருக்கிறது.
தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும். இப்பணிகளை உள்ளார்ந்த அக்கறையோடு மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும். இப்பணிகளை உள்ளார்ந்த அக்கறையோடு மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.(2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 23, 2022