#BREAKING: வேலூர் பாலியல் சம்பவம் – மேலும் ஒருவர் கைது
வேலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்த காவல்துறை.
வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் மணிகண்டன், பார்த்திபன், பாரத் மற்றும் 2 சிறார்கள் ஆகிய 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
மருத்துவப்பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காவல்துறை கைதானவர்களை அழைத்து செல்கின்றனர். கடந்த 17-ஆம் தேதி வேலூரில் பெண் மருத்துவர், தனது ஆண் நண்பருடன் திரையரங்குக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் திரும்பிய போது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது.
ஆட்டோவில் தனது ஆண் நண்பருடன் சென்ற பெண்ணை, ஆட்டோவில் ஏறிய நான்கு பேர் அந்த பெண்ணையும், அவருடைய நண்பரையும் கத்தியை காட்டி மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் கத்தி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ந்தது அந்தக் கும்பல்.
பெண்ணின் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தலைமைறைவாக இருந்த நிலையில், அவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.