#Breaking:தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று முதல் 5 நாட்கள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை:
அதே சமயம்,இன்றும் நாளையும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் கணித்துள்ளது.
சென்னை:
சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இலேசானமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனிடையே மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மியான்மர் கடற்கரை அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.03.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு. pic.twitter.com/1xqmtXV4Ct
— TN SDMA (@tnsdma) March 23, 2022