இன்று உத்தரகாண்ட் முதல்வாராக புஷ்கர் சிங் பதவியேற்பு – விழாவில் பங்கேற்கும் பிரதமர்!
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.
முதல்வராக தேர்வு:
இதனையடுத்து,டேராடூனில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.அதன்படி,டேராடூனில் உள்ள பெரைட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்கள்:
அப்போது,உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்கிறார்.மேலும்,அவருடன் 10 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மதன் கௌசிக் கூறியுள்ளார்.
பிரதமர் பங்கேற்பு:
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.இதனால்,அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்டின் 12- வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்க உள்ளார்.அதே சமயம்,2 முறையாக உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.