குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க செயலி – தமிழக அரசு
குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.
தமிழகத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்காக பிறந்த குழந்தை 0 முதல் 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி குழந்தையின் வளர்ச்சியை, பிறந்த நாள் முதல் கண்காணித்து, பிரபு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய உதவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு அலை பேசிகளிலும் பயன்படுத்தலாம் என்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை அலுவலர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. @Manothangaraj @TNITDepartment pic.twitter.com/ivTiaRV1QK
— Tamil Nadu e-Governance Agency (TNeGA) (@TNeGA_Official) March 22, 2022