டெல்லியில் இலவச ராணுவ பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடம்..! டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் பேட்டி.
ராணுவ பயிற்சி பள்ளி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடத்தின் சிறப்பம்சங்கள்
பள்ளிக்கூடம் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும். ஆயுதப்படைகள் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக விடுதிகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பள்ளியில் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவரும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் சேரலாம். ஒவ்வொரு வகுப்பிலும் தலா 100 இடங்கள் இருக்கும். நடப்பு ஆண்டில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதற்காக 18 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.