கடத்தலுக்கு எதிர்ப்பு…! பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட இந்து சிறுமி..!
கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாகிஸ்தானில் இந்து சிறுமி சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அடிக்கடி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக கடத்தி மதமாற்றம் செய்வதும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
கடத்தல் முயற்சி
அந்த வகையில் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் வசித்து வந்த இளம்பெண் பூஜா. இவருக்கு வயது 18, இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் பூஜாவை கடத்த முயற்சி செய்துள்ளது.
சுட்டுக்கொலை
இதனையடுத்து பூஜா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பூஜாவை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது.