#Breaking:நீட் தேர்வு:”இந்த மாணவர்களின் விவரம் இல்லை” – தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி பதில்!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற மற்றும் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது.
நீட் ரத்து?:
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில்,நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு சமீபத்தில் முதல்வர் அவர்கள்,ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து வலியுறுத்தினார்.மசோதாவை அனுப்புவதாக ஆளுநரும் உறுதியளித்துள்ளார்.
இவர்களின் விவரங்கள் இல்லை:
இந்நிலையில்,கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை,நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற மற்றும் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.