விடுமுறை நாளில் கைதா? – ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Default Image

கடந்த 2020 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும்,மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 19 ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு:

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு:

அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏபிவிபி முன்னாள் நிர்வாகி சுப்பையாவை மார்ச் 31ம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைவர் பதவியில் இருந்து நீக்கம்:

இதனிடையே,கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து சுப்பையா ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டார்.தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்தாக சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜாமீன்:

இந்நிலையில்,இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏபிவிபி-யின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மருத்துவருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கூறியதாவது: “மனுதாரர் சட்ட உதவி பெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் பொது விடுமுறை நாளில் தேவையில்லாமல் அவரை காவலர்கள் கைது செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.எனவே,இந்த நீதிமன்றம் மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறது.

நீதிமன்றம் கண்டனம்:

ஆந்திரா உயர்நீதிமன்றம்,குஜராத் உயர்நீதிமன்றம்,ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஆகியவை இதுபோன்ற வழக்குகளை இவ்வாறே கையாண்டு,பொது விடுமுறை நாளில் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன”,என்று கூறினார்.இதனையடுத்து,அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய மார்ச் 23 ஆம் தேதிக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்