#Breaking:137 நாட்களுக்கு பிறகு அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
எனினும்,கடந்த 137 வது நாளாக மாற்றமின்றி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,137 நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
உக்ரைன்- ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 117 டாலர்களாக அதிகரித்துள்ள நிலையில்,தற்போது பெட்ரோ,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025