#BREAKING: சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை- ஓ.பன்னீர்செல்வம் ..!

Default Image

நான் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று காலை 11.40 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணி வரை முதற்கட்டமாக நடைபெற்றது. இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணை மீண்டும் 3 மணிக்கு தொடங்கியது.

அப்போது, சிசிடிவி அகற்றம் தொடர்பாக தலைமை செயலாளர், சுகாரத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பெயரிலே சிசிடிவி அகற்றியதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, நான் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை.

கையெழுத்து போட்டிருப்பேன்:

தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே. ஜெயலலிதாவிற்கு சிகிக்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சிகிக்சை அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து ராம் மோகன் ராவ், தன்னிடம் எதுவும் பேசவில்லை. அப்படி கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவையை கூட்டச் சொன்னதாகவும், 4 நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாக ராம்மோகன் ராவ் விசாரணை ஆணையத்தில் கூறியதை சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ். இடம் கேள்வி எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்