யுவன் இசையில் படுஜோராக களமிறங்கும் புகழ்.! இத நீங்க எதிர்பார்க்கலயே.!?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ். தற்போது அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி,சந்தானம் , சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் உயரம் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் புகழ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மூலம் அறிமுமாக இருக்கிறார், அந்த படத்தை இயக்குனர் ஜே. சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் மாதவனை வைத்து என்னவளே படத்தை இயக்கியிருந்தார்.
புகழ் நடிக்கும் இந்த படத்திற்கு “Mr. Zoo keeper” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் புகழிற்கு ஜோடியாக நடிகை ஷிரின் காஞ்சவாலா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது போஸ்டரில், புகழ் கையில் கிளியுடன் காட்டிற்குள் அமர்ந்திருப்பது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று ஊட்டியில் தொடங்கப்பட்டது.
பின்னர் படக்குழு அடுத்த செட்யூலுக்கு பிலிப்பைன்ஸுக்குச் செல்லுவதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த புகழ் தற்போது ஹீரோவாக யுவன் இசையில் நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
???? pic.twitter.com/bLIt8OkXH6
— Pugazh (@pugazh_iam) March 20, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025