அரசியல் கட்சிகள் மக்களிடம் மதம், சாதி போன்றவற்றால் பிளவை ஏற்படுத்துகின்றன – குலாம் நபி ஆசாத்

Default Image

தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறிய பண்டிட்களின் உண்மைக்கதையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டும் பாராட்டும்..!

இப்படம் குறித்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை இந்தத் திரைப்படம் விதைப்பதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

எந்த கட்சியையும் மன்னிப்பதில்லை..!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து, குலாம் நபி ஆசாத் கூறுகையில், மகாத்மா கா்நதி மிகப்பெரிய இந்து மற்றும் மதச்சார்பின்மைவாதி என்பதை நான் நம்புகிறேன். ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற அனைத்திற்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் பொறுப்பேற்க வேண்டும்.  அரசியல் கட்சிகள் மக்களிடம் எப்போதுமே மதம், சாதி, மற்றும சிலவற்றின் மூலம் பிளவை ஏற்படுத்துகின்றன. இந்த விஷயத்தில், என்னுடைய காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியையும் மன்னிப்பதில்லை. சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi