#Breaking:சற்று நேரத்தில் விசாரணை- ஓபிஎஸ் நேரில் ஆஜர் !

Default Image

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஓபிஎஸ்-க்கு சம்மன் 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர் 

அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகியுள்ளார். இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெறுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்:

இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில்,தற்போது ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார்.அவரிடம் 11.30 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது.ஓபிஎஸ் அவர்களுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு, பல்வேறு காரணங்களால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.

அறிக்கை தாக்கல்:

இதனைத் தொடர்ந்து,மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, இவர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து 3 அல்லது நான்கு மாதங்களுக்குள் அரசிடம் ஆணையம் அறிக்கையை சமர்பிக்கும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்