இந்தியாவை உலகின் முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை நடத்திய 12-வது கேடோ ஃபியஸ்டா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற தேசிய படை மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மத்திய அரசின் இலக்கு இதுதான்…!
அப்போது பேசிய அவர் மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு உலகின் முதன்மையான நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த இலக்கிற்கான பாதையை நாட்டில் இளைஞர்கள் தான் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவில் உருவாக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு, தங்குமிடம், சுத்தமான தண்ணீ,ர் சுகாதாரம், கல்வி, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தடையின்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.