கோடநாடு வழக்கு – சாட்சி விசாரணைக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடைபெற்று வருவதால், சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது மேல் விசாரணை நடத்தப்படும் நிலையில், சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவர் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று தீபுவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.