இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரன் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன் சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் அவர்கள் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் நாள் 30-4-2013) தெரிவித்திருந்ததை பிரதமர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும். நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967 ஆம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும் நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை,
பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை
எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/s4J3UzXSV3— CMOTamilNadu (@CMOTamilnadu) March 19, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025