#BREAKING: சட்டப்பேரவை ஒத்திவைத்து -சபாநாயகர் அறிவிப்பு..!
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு ,சட்டப்பேரவையின் இன்றைய நாள் முடிவுற்றது. மீண்டும் சட்ட பேரவை வருகின்ற திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கூடும் என அறிவித்தார்.