#Breaking:தமிழகத்தில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருந்த நிலையில்,50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வேளாண் துறை அமைச்சர் வெளியிட்டு வருகிறார்

இந்நிலையில்,தமிழத்தில் இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

சிறுதானிய மண்டலங்கள்:

அதன்படி,திருவண்ணாமலை,சேலம்,கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர்,தருமபுரி,,கிருஷ்ணகிரி,வேலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த முதல் சிறுதானிய மண்டலம் உருவாக்கப்படும் என்றும், தூத்துக்குடி, விருதுநகர்,மதுரை,தென்காசி,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை கொண்டு இரண்டாவது சிறுதானிய மண்டலம் என மொத்தம் இரு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கபப்டும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும்,2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது,இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்