வேளாண் & தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி..!
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று 2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நிதியுதவி
2022-2023ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.