#தமிழகபட்ஜெட்தாக்கல்2022:பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் பதிப்பு – நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!
2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அதன்படி,பேசிய நிதியமைச்சர் “,தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய வாய்ப்புள்ளது.அந்த வகையில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது.மேலும்,வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்”,என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.
மேலும்,விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிடிஆர் தெரிவித்துள்ளார்.