ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு- சுகாதாரத்துறை..!
தமிழக்தில் கொரோனாவை உறுதி செய்யும் ஆர்டி-பிசிஆர் ( RT – PCR) பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனை கட்டணம் குறைப்பு:
அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ.400லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.700லிருந்து ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.