இளைஞர் வேலைவாய்ப்பின்மை 25.5%-ஆக உயர்வு..!
நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களான 2021 ஏப்ரல்,மே மற்றும் ஜூன் வரை 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை சராசரி 25.5% ஆக இருந்தது.
அதில், தமிழகத்தில் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை 28.5%-ஆக இருந்தது. பெண்களிடம் வேலைவாய்ப்பின்மையில் 67 சதவிகிதத்தோடு காஷ்மீர் முதல் இடத்திலும், 59 சதவிகிதத்தோடு கேரளா இரண்டாம் இடத்திலும் இருந்தன. அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்பின்மை 50%-ற்கும் மேல் இருந்தது.
நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் நீடித்தாலும் 2020-2021 -ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 20.8 சதவிகிதத்தோடு ஒப்பிடுகையில் 2021-2022 -ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் 12.6% -ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.