பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..! பகவந்த்மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதி  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.  பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.  இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16-ஆம் தேதி) பதவியேற்கிறார். அவர் கூறியபடி சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. சுமார் 3 லட்சம் பேர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,வாகனங்களை நிறுத்துவதற்காக 50 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது. மேலும்,10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கும் பகவந்த் மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை இந்திய யூனியனில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்