தளபதி என்ட்ரி.! பீஸ்ட் ரிலீஸ் தேதி குறித்து கிடைத்த மாஸ் தகவல்.!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கான ஆடியோ லான்ச் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனடுத்து தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான அரபிகுத்து பாடல் யூடியூபில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் வெளியிட்டு தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் பரவியது என்பதயு குறிப்பிடத்தக்கது.