#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு – எங்கெங்கு சோதனை!

கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.தான் ஆட்சியில் இருந்தபோது டெண்டர்களை முறைகேடாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில்,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் எஸ்.பி வேலுமணி வீடு உட்பட 41 இடங்கள்,சென்னையில் 8 இடங்கள்,சேலத்தில் 4 இடங்கள்,திருப்பத்தூரில் இரண்டு, நாமக்கல்-1,கிருஷ்ணகிரியில் 1,கேரளாவில் 1 என மொத்தம் 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து,முதற்கட்ட தகவலின் அடிப்படையில் ரூ.58.23 கோடிக்கு குறிப்பாக 3928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேலும் 3 வழக்குகள் பதிந்துள்ளனர்.மேலும்,அவரது மனைவி,சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில்,எஸ்.பி.வேலுமணி உள்பட 13 பேர் மற்றும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,கோவையில் உள்ள வீட்டில் எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவித்துருவி கேள்வி கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025