மார்ச் 31-க்குள் இதை இணைக்காவிட்டால் அபராதம்- மத்திய அரசு அறிவிப்பு..!
நீங்கள் இதுவரை உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், விரைவில் இணைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு இரண்டுமே அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் அட்டை பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது வங்கி, வருமான வரி அல்லது வணிகம் தொடர்பான வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மக்களவையில் பான் கார்டை ஆதாருடன் இணைக்காததற்கு அபராதம் விதிக்கப்படுமா..? என்ற கேள்விக்கு இன்று பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஆதார் அட்டையுடன், பான் அட்டையை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூபாய் 1000 அபராதம் என அறிவித்துள்ளார். ஆதார் உடன் பான் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு ஏற்கனவே பலமுறை அவகாசம் அளித்துள்ளது எனவும் கூறினார்.