அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்- பொதுமக்கள் அவதி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று காலை முதல் பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் சிரமத்த்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.